செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (10:43 IST)

தேர்தல் வெற்றியை யாரையும் தொந்தரவு பண்ணாம கொண்டாடுங்க! – முதல்வர் வலியுறுத்தல்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றுள்ள நிலையில் வெற்றியை அமைதியாக கொண்டாடும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் அவர் “திமுக கூட்டணி பெற்ற வெற்றி கடந்த 5 மாதமாக திமுக சிறப்பாக செயல்பட்டு வருவதற்கான அடையாளம். ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 5 மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது என்பதை மறுக்க முடியாது. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம். தொண்டர்கள் தேர்தல் வெற்றியை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கொண்டாடுங்கள்” எனக் கூறியுள்ளார்.