வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (08:11 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கொட்டபோகுது மழை: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வட மாவட்டங்களில் வறண்ட வானிலேயே இருக்கும் என்றும் தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தென் மாவட்டங்களில் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் அவ்வப்போது பெய்து வரும் லேசான மற்றும் மிதமான மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அதேபோல் ஏப்ரல் 24, ஏப்ரல் 25 தேதிகளில் தமிழக மற்றும் புதுவையில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran