1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (16:46 IST)

ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற இளைஞருக்கு பாலியல் தொல்லை! அதிரவைக்கும் சம்பவம்!

ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற இளைஞருக்கு பாலியல் தொல்லை! அதிரவைக்கும் சம்பவம்!
சென்னையில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ஒரு நபர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இப்போது பைக் டாக்ஸிகளின் பயன்பாடுகள் அதிகமாகியுள்ளன. ஆட்டோ, மற்றும் டாக்ஸி ஆகியவற்றை விட மலிவாக இருப்பதால் இதற்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அது போல ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற நபருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார் ஒரு நபர்.

அயனாவரம் பகுதியைச் சேர்ந்த கேசவதன் ராஜ், பெரம்பூருக்கு செல்வதற்காக ரேபிடோ டாக்ஸியை புக் செய்துள்ளார். இந்நிலையில் அவரின் பைக்கை ஓட்டி வந்த நபர் கேசவதன்ராஜிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது மட்டுமில்லாமல் 22 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பிடுங்கிக் கொண்டு நடுரோட்டில் விட்டு சென்றுள்ளார். அதையடுத்து போலிஸிடம் கேசவதன் ராஜ் கொடுத்த புகாரை அடுத்து ராஜேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.