திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (16:36 IST)

பூ பாதையா? சிங்க பாதையா? மேலும் ஒரு போஸ்டர்!

ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வரும் அவர் பெயரில் வெளியான கடிதமும் நேற்று அவர் பதிவு செய்த டுவிட்டும் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் ரஜினியின் உடல்நிலையை முன்னிலைப் படுத்தி தற்போதைக்கு அரசியலுக்கு வருவது தனது உடல்நிலைக்கு நல்லதில்லை என்பது போல சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காலம் காலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்து வருகின்றனர். மேலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அரசியலுக்கு வரவேண்டும் என போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதையடுத்து இப்போது கோவை ரஜினி ரசிகர்களும் போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இப்போது வேலூர் ரஜினி ரசிகர்கள் ‘பூ பாதையா? சிங்க பாதையா? மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கழுகு கூட்டத்தையும் ஓநாய் கூட்டத்தையும் வேட்டையாட சிங்க பாதையில்தான் செல்லவேண்டும். எங்க ஓட்டு ரஜினி ஒருவருக்கே.’ என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.