தமிழகத்தில் அதிகரிக்கும் அகால மரணங்கள்!. ஆண்களுக்கு எச்சரிக்கை!...
தமிழ்நாட்டில் சமீப காலமாகவே நிறைய சாலை விபத்துக்கள் நடந்து அகால மரணங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் ஆண்கள் அகால மரணம் அடைவது அதிகரித்திருப்பதக புள்ளி விவரங்கள் சொல்கிறது.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் படி 2025ம் வருடத்தில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சத்து 93 ஆயிரம் இறப்புகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆண்கள் எனவும் 2 லட்சத்து 90 ஆயிரம் போர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
மேலும் ஆண்களில் 86 சதவீத இறப்புகள் 15 முதல் 64 வயதுற்குட்பட்ட உழைக்கும் வயதினரிடையே நிகழ்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விபத்துகளால் பல பெண்கள் இளம் வயதில் கணவனை இழப்பதும், குழந்தைகள் தந்தை இழப்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்கள், தற்கொலை, புகையிலை, மதுப் பழக்கம், ஆரம்பத்திலேயே கண்டறியப்படாத இதய பிரச்சினை மற்றும் சிறுநீர நோய்களே ஆண்களின் அகால மரணங்களுக்கு அதிக காரணங்களாக இருப்பதாக அந்த புள்ளிவிவரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.