1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Men attacked in marriage reception

கல்யாண வீட்டில் நடனமாடுவதில் பிரச்சனை… அரிவாள் வெட்டில் முடிந்த பயங்கரம்!

திருமண வரவேற்பு
சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தினகரன் மற்றும் மஞ்சுளா ஆகிய தம்பதிகளுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது பல்வேறு சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு விருந்தினர்கள் நடனமாடி உள்ளனர்.

அப்போது மணமகளின் அண்ணன் வினோத்தின் நண்பர்களுக்கும், மணமகனின் நண்பர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் வெளியே சென்ற வினோத் குழுவினர் அரிவாளோடு வந்து தினேஷ், யுவராஜ், ஹேமந்த் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வெட்டுப்பட்டவர்கள் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டனர். தப்பிச் சென்றவர்களை போலிஸ் இப்போது தேடி வருகிறது.
About Writer
mahendran