1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (10:36 IST)

இனிமேல் ஷங்கர் படத்தில் நடிக்க மாட்டேன்… ஒபனாக சொன்ன வடிவேலு!

நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே 24 ஆம் புலிகேசி படத்தின் உருவாக்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வடிவேலுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க வடிவேலு தயங்கிய போது அவருக்கு நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப்  படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிய போது மீண்டும் அதே கூட்டணி இணைந்தது.

ஆனால் பட உருவாக்கத்தின் போது ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து அந்த படம் கைவிடப்பட்டது. இதனால் ஷங்கரைப் பற்றி வடிவேலு பல இடங்களில் விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் மேற்கொண்டு வடிவேலு ஷங்கர் படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வடிவேலு ‘இனிமேல் அந்த பக்கமே போகமாட்டேன்’ என ஓபனாக சொல்லியுள்ளார்.