பெரியார் புத்தகத்தை எரித்தவர்கள் மீது வழக்குப் பதிவு!

Last Updated: வியாழன், 14 ஜனவரி 2021 (09:51 IST)

நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானார் என்ற புத்தகத்தை எரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது கோவையில் செல்வபுரம் பகுதியில்
இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள்
போகி பண்டிகையை முன்னிட்டு பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் ஆகிய புத்தகங்களை எரித்தனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமூகவலைதளங்களில் அவர்களுக்கு எதிராக கண்டனங்களும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

அதையடுத்து அவர்கள் ஐந்து பேர் மீதும் போலிஸார் 153 எ மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :