வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:30 IST)

காலியாகும் தினகரன் கூடாரம்: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர தேடனும் போலயே...

அமமுகவில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். 
 
அமமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் துரோகிகளை தோற்கடிப்பது தான் எங்களின் முக்கிய நோக்கம் எனவும் கூறினார். 
 
ஆனால், இன்று அமமுக அமைப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான சிவா.ராஜமாணிக்கம் , முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து, அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது, அவருடன் திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான காமராஜ் உடன் இருந்தார்.
 
முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்கள் தினகரன் கட்சியில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது.