வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:56 IST)

பாவம்யா... உடன் பிறப்புகளை பிழிந்து ஜூஸ் போடும் உதயநிதி!!

திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் கழக உடன் பிறப்புகளிடம் வேலை வாங்குவதில் கில்லாடியாக உள்ளாராம். 
 
திமுக இளைஞர் அணி செயளாலராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட போது பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவில் இருந்த சிலருக்கும் தலைமையின் இந்த முடிவில் வெளியே கூற முடியாத அதிருப்தியும் இருந்தது தெரிந்ததே. 
 
ஆனால், இப்போது அந்த அதிருப்தி எல்லாம் மாறி வருகிறதாம். உதயநிதி ஸ்டாலின் பார்ப்பதற்கு அமைதியாக காணப்பட்டலும் தனது வேலைகளிலும் நிர்வாகிகளை கவனித்துக்கொள்வதிலும் கில்லாடியாக உள்ளாராம். அதேபோல வேலை வாங்குவதிலும் படு சூரியாக உள்ளாராம். 
அதிலும் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வேலை அதிகரித்துள்ளதாம். வேலை கொடுத்தாலும் சிறப்பாக களப்பணியாற்றும் இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுதியும் வருகிறாராம். 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி திமுக தரப்பில் வேட்புமனுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு தாக்கல் செய்ய அவகாசம் 27ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.