செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 18 மார்ச் 2023 (23:39 IST)

நூலக வளர்ச்சிப் பணிகள் கூட்டம்...புலவர்களுக்கு பாராட்டு

books
நூலக நண்பர்கள் திட்டம் & நூலக வளர்ச்சிப் பணிகள்  கூட்டம் இன்று (18.03.2023) மதியம்  குளித்தலை ஊதிய மைய நூலகத்தில் நடைபெற்றது.
 
தமிழகத்தில் பல மாவட்டங்களில்  நூலகங்கள் இருக்கிறது. இவற்றை அரசு நடத்தி வருகிறது.  இதில், அந்தந்த ஊரைச் சேர்ந்த பலரும்  நூலகத்தில் உறுப்பினர்களாக இருப்பதைப் போன்று, சமூக ஆர்வலர்களும், புத்தக விரும்பிகள் என பலரும் இதில், புரவலர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நூலக நண்பர்கள் திட்டம் & நூலக வளர்ச்சிப் பணிகள்  கூட்டம் இன்று (18.03.2023) மதியம்  குளித்தலை ஊதிய மைய நூலகத்தில் நடைபெற்றது.
 
இதில்,நூலக நண்பர்கள் திட்டம் நடைமுறை  குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நூலக வளர்ச்சிப் பணி குறித்து நூலகர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
குளித்தலை ஊதிய மையத்தை சேர்ந்த கிளை. ஊர்ப்புற நூலகர்கள் இன்று 20 புரவலர்கள் சேர்த்துள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.