வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (19:48 IST)

ஓய்வுபெறும் சட்டத்திற்கு எதிர்ப்பு - பிரான்சில் வெடித்தது வன்முறை

France
பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் எலிசபெத் போர்ன் தலைமையிலான டெரடோரிஸ் ஓ ஆஃப் பிராகரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 2 ஆண்டுகள் உயர்த்தி 62 லிருந்து 64 ஆக மாற்றியுள்ளது.

ஓய்வுபெறும் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், இப்போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டது.  வன்முறையைத் தடுப்பதற்காக போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசினர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் வாகங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், அரசு ஏதாவது  முடிவெடுக்க வேண்டுமென்று அரசியல் விமர்சகர்களும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.