வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:19 IST)

நடிகை மீராமிதுன் மீண்டும் கைது: கொலை மிரட்டல் வழக்கில் சிக்கினார்

நடிகை மீரா மிதுன் ஏற்கனவே பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மீராமிதுன் ஜாமின் மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொலை மிரட்டல் வழக்கில் நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் கைது நடவடிக்கை பாய்ந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து நடிகை மீரா மிதுன் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது