1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Minister arrested BJP-Shiv Sena clash

அமைச்சர் கைது: பாஜக -சிவசேனா கட்சியினர் இடையே மோதல்

மத்திய அமைச்சர் நாராயண ரனே
முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் எனக் கூறிய மத்திய அமைச்சர் நாராண ரானேவை நாசிக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் பாஜக- சிவசேனா கட்சியினர்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ராய்க்கட் மாவத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நாராயண ரானே, முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் எனக் கூறினார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில், நாசிக் , புனே ஆகிய கவல்நிலையங்களில் இதுகுறித்துப் புகார் அளிக்கப்பட்டு, முதல் தக்வல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று நாசிக் காவல்துறையினர் மத்திய அமைச்சர் நாராயண ரனேவை கைது செய்துள்ளனர்.

தற்போது மத்திய அமைச்சர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதால் இந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக மும்பையில்  பாஜக தொண்டர்களும், சிவசேவான தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.

இந்தச் சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு