மதுமிதாவின் சம்பளப்புகார் – விஜய் டிவிக்கு ஆதரவாக மீராமிதுன், சாக்‌ஷி அகர்வால் !

Last Modified சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:28 IST)
விஜய் டிவியின் மீது சம்பளப்புகார் சொல்லியுள்ள மதுமிதாவுக்கு எதிராக மீரா மிதுன் மற்றும் சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் விஜய் டிவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகளை மீறி கையினை அறுத்துக்கொண்டதாக மதுமிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா, விஜய் டிவி நிர்வாகத்திடம் சம்பள பணம் கேட்டு மிரட்டியதாக விஜய் டிவி தரப்பில் இருந்து காவல்துறையினர்களுக்கு புகார் வந்தது. ஆனால் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதாக மதுமிதா விஜய் டிவியின் மேல் புகார் வைத்தார். மேலும் இதில் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

42 நாள்களில் நிகழ்ச்சியில் இருந்ததற்காக 11,50,000 ரூபாய் வழங்கப் பட்டுள்ளதாகவும் மீதிக்கான இன்வாய்ஸ் கொடுத்தும் நிர்வாகம் பணம் கொடுக்காமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் பிக்பாஸில் கலந்துகொண்டு வெளியேறிய மீராமிதுன் ‘எனக்கும் சேனலுக்கும் நல்ல பிணைப்பு உள்ளது. என்னிடம் மரியாதையாக நடந்துகொண்டார்கள்.

இதுபோல மற்றொரு போட்டியாளரான ‘100 நாட்கள் முடிந்த பின்னர்தான் மீதிப்பணம் தரப்படும் எனத் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :