காதல், பாசம் இரண்டும் வழுக்குது - யாரை சொல்கிறார் கமல்! கஸ்தூரி வெளியேற்றமா?

Last Modified சனி, 24 ஆகஸ்ட் 2019 (14:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியவந்துள்ளது. கமல் பங்கேற்றுள்ள இன்றைய எபிசோடின் ப்ரோமவில் லொஸ்லியா , கவின் காதலை பற்றி நோட்டமிட்டு பேசியுள்ளார். 


 
அதாவது , உள்ளே இருக்கும் போட்டியார்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி படையே இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை அவர்கள் இழந்து விட்டதாக எனக்கு தோன்றுகிறது. "ஒரு பக்கம் காதல் வழுக்குது இன்னொரு பக்கம்பாசம் வழுக்குது" என்று கவின் லொஸ்லியா , ஷெரின் தர்ஷனை டார்கெட் செய்கிறார். மேலும் வெற்றியை நோக்கி அவர்கள் நகரவேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுபடுத்தும் வாரம் இந்தவாரம் என்று கூறி முடிக்கிறார். 
 
இதனை அறிந்த நெட்டிசன்ஸ் பலரும் " ஆமாம் ....சொல்லுறதெல்லாம் நல்ல தான் இருக்கு.. ஆனாலும் முதல் வாரத்தில் இருந்து தான் இந்த காதல் நாடகம் அரங்கேறி வருகிறது,  இருந்தாலும் முடிந்த பாடில்லை என்று சலிப்புடன் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ  இந்த வாரம் கஸ்தூரி வெளியேறிவிடுவார் என கணித்து வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :