செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:35 IST)

கேப்டன் ஆன சேரன்..! இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டது. 


 
தலைவர் பதவிக்காக  சேரன் , சாண்டி , லொஸ்லியா உள்ளிட்ட மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் யார் அதிக எண்களை முதலில் பெறுகிறார்களோ அவர் தான் தலைவர் என அறிவிக்கப்பட சேரன் கிடுகிடுவென அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை தட்டி சென்றார். சேரன் கடந்த இரண்டு வார காலமாக தலைவர் பதவிக்காக காத்திருந்த வேளையில் கடைசியாக கேப்டனானதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் அவரது முகம் பிரகாசித்தது.  உடனே கஸ்தூரி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
பிக்பாஸ் பிளான் படி பார்த்தோமானால், யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களே அவரை எதாவது பிரச்சனையில் மாட்டிவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார்கள். அப்படிதான் கடந்தவாரமும் மதுமிதாவுக்கு நடந்தது ...எனவே சேரனை திட்டமிட்டு வெளியியற்றுவதற்கு தான் இப்பொழுது தலைவராக தேர்தெடுத்துள்ளீர்களா...? என நெட்டிசன்ஸ் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.