திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2017 (11:57 IST)

மத்திய அரசுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தினகரன்: மயில்சாமி

நடிகர் மயில்சாமி கடந்த சில மாதங்களாக அரசியல் ஆவேச கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்களில் தெரிவித்து வருகிறார் என்பதுதெரிந்ததே. அந்த வகையில் இன்று அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் செய்த போது, மத்திய அரசுக்கு தினகரன் அல்வா கொடுத்துவிட்டதாக கூறினார்



 
 
மத்திய அரசு 1800 அதிகாரிகளை வைத்து கொண்டு சசிகலா, தினகரனின் உறவினர்கள் அனைவரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை செய்து கொண்டிருந்தபோது கூலாக தினகரன், பசுவுக்கு வாழைப்பழம் கொடுத்தது, மத்திய அரசுக்கு அவர் அல்வா கொடுப்பது போல் எனக்கு தெரிந்தது என்று நடிகர் மயில்சாமி கூறினார்.
 
மேலும் 'ரெய்டு என்பதை நான் குறைகூறவில்லை. அதே நேரத்தில் ஒரு பிரிவினர்களை மட்டும் குறிவைத்து ரெய்டு செய்யாமல் அனைத்து அரசியல்வாதி வீடுகளிலும் ரெய்டு செய்தால் இதைவிட கோடிக்கணக்கில் பணம் பிடிபடலாம் என்று மயில்சாமி கூறினார். மேலும் மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும், மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்யும் தினகரனை தான் பாராட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.