1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (20:06 IST)

12 மணி நேர சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கின: வருமான வரித்துறை தகவல்!!

ஜெயா டிவி மற்றும் சசிகலா உறவினர் வீடுகளில் காலை 6 மணி அளவில் துவங்கிய சோதனை 12 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்றது. 


 
 
1800 வருமான வரித்துறை அதிகாரிகள் 190 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 190 இடங்களில் வருமானவரி ரெய்டு நடப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும். 
 
இந்நிலையில் தற்போது விவேக் வீட்டில் சோதனை நடத்தியபோது தகராறு ஏற்பட்டதால், வரிமானவரித்துறை உயர் அதிகாரிகள் அங்கு கூடியுள்ளனர். 
 
மேலும், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அறந்தாங்கியில் நடைபெற்ற சோதனை நிறைவடந்ததாக தினகரன் ஆதரவாளர் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
சோதனைக்காக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டு உள்ளனர். சசிகலா உறவினர் வீடுகளில் சோதனை நடத்தும் முடிவு செப்டம்பரிலேயே எடுக்கப்பட்டிவிட்டதாம்.  
 
வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 190 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை, பெங்களூரு, கொடநாடு, கூடலூர் உள்ளிட்ட இடங்களிலும்  சசிகலா மற்றும் தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.