திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:06 IST)

ரெய்டில் சிக்குவாரா சசிகலா: வழக்கறிஞர் வீட்டில் அதிரடி சோதனை!

ரெய்டில் சிக்குவாரா சசிகலா: வழக்கறிஞர் வீட்டில் அதிரடி சோதனை!

இந்தியாவில் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனை தமிழகத்தில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடந்து வருகிறது. இந்த சோதனையில் சிறையில் உள்ள சசிகலாவையும் சிக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.


 
 
நேற்று அதிகாலை முதலே சசிகலா, தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடுகளிலும், அவர்களது ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது எனவும், இதற்கு பலரும் கண்டனம் கூறியுள்ளனர்.
 
ஒரே குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பது இந்தியாவிலேயே இதுவே முதல்முறை. இந்தியாவின் மிகப்பெரிய ரெய்டு இது என கூறப்படுகிறது. இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தெரிகிறது.
 
மேலும் இந்த ரெய்டில் சசிகலாவை சிக்க வைக்க திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நாமக்கலில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் அவரது நண்பர் சுப்பிரமணியன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.