தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை: அரசாணை வெளியீடு

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை
Last Modified செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (17:12 IST)
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை
நாடு முழுவதும் கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் நேரத்திலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்டம் என்ற இனிப்பான செய்தியைத் சமீபத்தில் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு கடந்த 25 ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்துள்ள நிலையில் அதற்கு முடிவு காணும்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை தனி மாவட்டமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களைச் சேர்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :