1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (09:42 IST)

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது: தமிழக அரசு அறிவிப்பு!

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது: தமிழக அரசு அறிவிப்பு!
நாளை வீடுகள்தோறும் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற இருப்பதால் ரேசன் கடைகள் செயல்படாது என அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணமும், ஏப்ரல் மாத ரேசன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் கூடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிற்கே வந்து டோக்கனுடன் நிவாரண பணமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி நாளை ஏப்ரல் மாத ரேசன் பொருட்களை யார் எந்த தேதியில் பெற்றுக்கொள்வது என்பது குறிப்பிடப்பட்ட டோக்கனும், ஆயிரம் ரூபாய் பணமும் நாளை ஒவ்வொரு வீடுகளிலும் ரேசன்கடை ஊழியர்கள் வழங்க இருக்கிறார்கள். அதனால் ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.