செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (15:29 IST)

உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை - தமிழக அரசு!

நோய்த்தொற்றால் இறந்தவர் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக அரசு அசசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
ஆம், நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.