முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!!
முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், NEET-PG ஐ NBE ரத்து செய்தது, UGC-NET ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை ஆழ்ந்த விரக்தியில் தள்ளியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக திட்டமிட்டு இணைவோம் என்று தெரிவித்துள்ளார்.
தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவதற்கு, தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, மிக முக்கியமாக, எங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை மீண்டும் நிறுவுவதற்காக இணைவோம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.