ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (16:17 IST)

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!

School Leave
தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து  ஜூன் 6-ஆம் தேதி அரசுப் பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். 

அண்டை மாநிலமான புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை போன்று தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக ஜூன் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.