உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
நாளை நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்காக 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முன்னதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்வியியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. 4000 உதவி பேராசிரியர் பணிகளுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் ஜூன் 7ஆம் தேதி தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran