வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (13:02 IST)

பிரபல மசாலா தொழிற்சாலையில் தீ விபத்து.. பல கோடி ரூபாய் சொத்துகள் சேதம்

பிரபல மசாலா தொழிற்சாலையில் தீ விபத்து.. பல கோடி ரூபாய் சொத்துகள் சேதம்
தேனியில் உள்ள மசாலா தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இயங்கி வந்த ஈஸ்டர்ன் மசாலா தொழிற்சாலையில், இன்று காலை தீடிரென கம்பெனியின் பின் பக்கத்தில் தீ பிடித்து எரிந்தது. இதனால் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தில், ஆலையில் இருந்த எந்திரங்கள், மசாலா பொருடகள் ஆகியவை கருகியது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் பெரும் என ஊழியர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.