1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (08:26 IST)

காஷ்மீரை அடுத்து அயோத்தியிலும் கெடுபிடி! என்ன நடக்க போகிறது?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்தை திடீரென தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மத்திய அரசு, அதன் பின்னர் அதிரடியாக அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370 ஆவது சிறப்புப் பிரிவை நீக்கியது. அதன்பின் தனது அபார மெஜாரிட்டியை பயன்படுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதுகுறித்த மசோதாவை நிறைவேற்றியது 
 
கடந்த சில வாரங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலையை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது
 
இந்த நிலையில் தற்போது காஷ்மீரை அடுத்து அயோத்தியிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோயில் குறித்த வழக்கு அக்டோபர் 17ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 17ஆம் தேதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தீர்ப்பில் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையில் அயோத்தியில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அயோத்தியின் பல பகுதிகளில் சிஆர்பிஎஃப் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பு வந்தால் உடனடியாக ராமர் கோவிலை கட்டும் பணியை பாஜக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ராமர் கோவில் கட்டுவதற்கான சூழல் ஏற்படும் நிலையில் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவே படைகள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
காஷ்மீர் பிரச்சனையை ராணுவத்தை வைத்து எளிதாக சமாளித்தது போலவே அயோத்தியில் இராமர் கோவில் பிரச்சனையையும் ராணுவத்தை வைத்து சமாளிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது