திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (17:20 IST)

தஞ்சாவூரில் சிக்கிய 170 கிலோ கஞ்சா… இலங்கைக்கு கடத்த முயற்சி!

தஞ்சாவூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சா பொட்டலங்கள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் என்ற பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட உள்ளதாக போலிஸாருக்கு வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண்டனர் கடல் பகுதியில் இருந்து 4 நாட்டிகல் மைல் தொலைவில் 85 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப் பட்டன. இவை ஒவ்வொன்றும் தலா இரண்டு கிலோ பொட்டலங்கள்.

இதையடுத்து படகில் இருந்த குமார் (38), கிருஷ்ணமூர்த்தி (35), கந்தன் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.