வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (17:42 IST)

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்; முதல்வர் வாழ்த்து

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா செளமியா – த .ஷங்கர் பாலாஜி ஆகியோரது திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை அவாழ்த்தினார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா செளமியா – த .ஷங்கர் பாலாஜி ஆகியோரது திருமணம் செப்டம்பர் 1 ஆம் தேதி  சென்னை அருகே
நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கிண்டில் ஐடிசி சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அரசியல்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.