வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:45 IST)

எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்துக்கு முதல்வர் வாழ்த்து!

நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இன்று காலையிலே சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் எளிய முறையில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. 

அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்து செய்திகளை தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், " தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என கூறி வாழ்த்தியுள்ளார்.