திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (20:06 IST)

பதக்கங்களுடன் திரும்பி வாருங்கள்: ஒலிம்பிக் வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

ஒலிம்பிக் செல்லும் தமிழக வீரர் வீராங்கனைகள் உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார்.
 
காணொலி முறையில் கலந்துரையாடியுள்ள முதல்வர்  பதக்கங்களுடன் திரும்பி வாருங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
தனலட்சுமி, சுபா, ரேவதி, ஆரோக்கியராஜ், நாகநாதன், பாண்டியன் ஆகியோர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி நிலையில், நமது வீரர்கள் வெற்றிவாகை சூடி பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்துக்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வீரர்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்