செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (22:07 IST)

சென்னை மெரீனாவில் வடிவேல் காமெடியாக மாறிய போலீசாரின் முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று சென்னை மெரீனாவில் மக்களோடு மக்களாக ஊடுருவிய போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

மெரீனாவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் போராட்டக்காரர்கள் ஊடுருவியதால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்வதற்காக பீச்சில் சுற்றி வரும் குதிரையை பயன்படுத்தினர்

ஆனால் பீச்சை சுற்றி சுற்றியே வரும்படி பழக்கப்படுத்தப்பட்ட குதிரை போலீஸார் ஏறியதும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வந்தது. 'குசேலன்' படத்தில் ரஜினியை பார்க்க செல்லும் வடிவேலு, கிளம்பிய இடத்திற்கே வந்தது போன்ற காமெடியாக மாறியது போலீசாரின் இந்த முயற்சி