புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (12:39 IST)

தமிழக மக்களின் முதல் எதிரிகள் ஊடகங்கள் தான்: மாரிதாஸ்

கடந்த சில நாட்களாக முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக பரபரப்பாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து திமுகவுக்கு எதிரானவர்கள் பல்வேறு கருத்துக்களை தங்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் என்பவர் இது குறித்து அடிக்கடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முரசொலி அலுவலகம் சென்று ஆய்வு செய்தது. அப்போது திமுக நிர்வாகிகள் அளித்த பதில் குறித்த செய்திகள் மட்டுமே ஊடகங்களில் வெளிவந்ததுல். எதிர்த்தரப்பில் கூறப்பட்டவை என்ன? ஆணையம் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?  என்பது குறித்த செய்திகள் எந்த மீடியாவிலும் வெளிவரவில்லை. மேலும் இதுகுறித்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அளித்த அறிக்கையை ஊடகங்கள் பெரிதாக செய்தியாக வெளியிட்டன.
 
இந்த நிலையில் மாரிதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று மாலை முரசொலி பஞ்சமி நிலம் சார்ந்து என் பக்க வீடியோ வெளியிடப்படும். செய்தியாளர்கள் முன் திமுக நிர்வாகிகள் நேற்று ஆடிய கீழ்த்தரமான நாடகம் என்ன என்பதையும் முழுமையாக விளக்கம் தரப்படும். செய்தி நிறுவனங்கள் தான் தமிழக மக்களின் முதல் எதிரிகள் என்று கூறியுள்ளார்.
 
இன்று மாலை மாரிதாஸ் வெளியிடும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது