செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (08:43 IST)

1000 ஏக்கர் நிலத்தை திமுகவுக்கே கொடுக்க தயார்: டாக்டர் ராம்தாஸ் அறிவிப்பு

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த நேற்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகள் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்
 
இந்த விசாரணைக்கு பின்னர் திமுகவின் ஆர்எஸ் பாரதி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது ’முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டதாகவும் இந்த பிரச்சனையை எழுப்பிய டாக்டர் ராமதாஸ் அவர்களின் ஆயிரம் ஏக்கர் நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பது குறித்து விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார் 
 
இதனையடுத்து ஆர்.எஸ் பாரதியின் இந்த கருத்துக்கு டாக்டர் ராமதாஸ் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை!
 
முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்’ என்று கூறியுள்ளார். டாக்டர் ராமதாஸின் இந்த சவாலுக்கு திமுகவின் ரியாக்சன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்