சென்னை கோயம்பேடு சந்தைக்கு திடீரென விடுமுறை அறிவித்ததால் பரபரப்பு
கொரோனா வைரஸ் தீவிரமாக இந்தியாவில் பரவி வருவதை அடுத்து, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை அத்தியாவசியத் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை மக்களுக்கு இடையூறு இல்லாமல் காய்கறி கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்று கோயம்பேடு சந்தை திறந்து இருக்கும் என்றும் கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து காய்கறிகளும் கோயம்பேடுக்கு வர தொடங்கியதை அடுத்து கோயம்பேடு சந்தை பரபரப்பாக இயங்கி வருகிறது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மார்ச் 27 மற்றும் மார்ச் 28ஆம் தேதி விடுமுறை என காய்கறிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனவே இந்த இரண்டு நாட்களுக்கும் சேர்ந்து சென்னை பொது மக்கள் முன்கூட்டியே காய்கறி வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்