1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (10:15 IST)

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற மூவர் விபத்தில் பலி!

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி
கொரோனா வைரஸ் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு என திடீரென தமிழக அரசு அறிவித்ததால், சென்னையிலுள்ள ஆயிரக்கணக்கானோரை சொந்த ஊரை நோக்கி செல்ல படையெடுத்தனர் 
 
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் செல்ல குவிந்தனர். பேருந்து கிடைக்காமல் டாக்ஸி உள்பட பல்வேறு வாகனங்களில் சொந்த ஊருக்கு பலர் சென்றனர் 
 
இந்த நிலையில் ஓசூரில் இருந்து சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு பைக்கில் செல்ல இருவர் முடிவெடுத்தனர். அவ்வாறு அவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்த போது லாரியை முந்த முயற்சித்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.
 
அதேபோல் சென்னையிலிருந்து மதுரைக்கு பைக்கில் செல்ல முயன்ற உதவி இயக்குனர் ஒருவரும் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சொந்த ஊருக்கு செல்வதற்கு அல்ல, வீட்டிலேயே தனிமையில் இருக்க தான் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியும் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பைக்கில் சென்று தற்போது உயிரையே பலியாக்கியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.