டிடிவி தினகரன் காமெடி பண்ணுகிறார்… அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து!
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தயார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுக மற்றும் பாஜக ஆகியக் கட்சிகளோடு கூட்டணி அமைப்பதில் பிரச்சனை இல்லை எனத் தெரிவித்திருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தினகரன் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.
விழா ஒன்றில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வுக்கு தலைமையேற்ற அவர் செய்தியாளர்களிடம் பரபரப்பான அரசியல் சூழலில் யாராவது காமெடி பண்ணவேண்டுமே. அதைதான் டிடிவி தினகரன் செய்துகொண்டிருக்கிறார். அமமுக தலைமையில் அதிமுக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை. எனக் கூறியுள்ளார்.