வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (15:49 IST)

அதிமுகவுடன் உடன்பாடில்லை.. பெரிய கட்சியுடன் பேசுகிறோம்: மன்சூர் அலிகான் அறிவிப்பு..!

நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் இன்னொரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து இந்திய ஜனநாயக புலிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை மன்சூர் அலிகான் தலைமையிலான குழு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை, இருப்பினும் பேச்சு வார்த்தை தொடர உள்ளது. 
 
மேலும் அதிமுகவை தவிர்த்து வேறொரு பெரிய கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரல் தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்று தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயக புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’
 
Edited by Siva