ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (20:06 IST)

சென்னையில் நாளை முதல் பால் பாக்கெட் பிரச்சினை இருக்காது! – அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி!

MANO THANGARAJ
சென்னையில் மழை வெள்ளம் காரணமாக பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை முதல் இந்த பிரச்சினை இருக்காது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.



சென்னையில் புயல் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். பல பகுதிகளில் பால் பாக்கெட்டுகள் சரியாக மக்களுக்கு கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. ஆவின் பால் பண்ணையில் தண்ணீர் புகுந்ததால் பால் உற்பத்தியில் சிக்கல் எழுந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பேசியுள்ள அமைச்சர் மனோ.தங்கராஜ், நாளை முதல் எந்த சிரமமும் இன்றி அனைவருக்கும் பால் பாக்கெட்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாதவரம், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 3 பகுதிகளிலும் உள்ள ஆவின் பால் பண்ணைகள் முழுமையாக இயங்க தொடங்கியுள்ளதாகவும், நாளை சென்னையில் வழக்கம்போல் 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K