வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (08:06 IST)

'ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

MANO THANGARAJ
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்வது குறித்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ’ரேஷன் கடைகளில் பால் விற்பனை செய்யப்படவில்லை, ஆனால் அதே நேரத்தில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
 இதனால் ஆவின் நிர்வாகத்தின் விற்பனைகள் எந்தவித பாதிப்பும் இருக்காது. இது கூடுதல் வியாபாரத்தை பெருக்க எடுக்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.

மேலும் ஆவின் பால் பண்ணைகளில் பணிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில் தானியங்கி நிறுவனங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

ரேஷன் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்தால் அந்த பொருட்களின் விற்பனை அதிகமாகும் என்றும் பொதுமக்களுக்கும் வசதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva