திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (14:40 IST)

மணிப்பூர் விவகாரம்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கே நேர்ந்த கொடுரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற கூட்டம் 3 நாட்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மணிப்பூர் சம்பவத்தை தாண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
மேலும் கைகளில் பதாகைகளை ஏந்தி  மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran