செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (15:19 IST)

நிர்வாணமாக வீட்டுக்குள் நுழைந்த நபர்… அலறியடித்த குழந்தைகள் – போக்ஸோ சட்டத்தில் கைதான நபர்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே குழந்தைகள் மட்டும் இருந்த வீட்டில் ஆடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக வந்த நபர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது பிச்சிவாக்கம் ஊரைச் சேர்ந்தவர்கள் தமிழ் மற்றும் ஷகிலா தம்பதிகள். இவர்களுக்கு 11 மற்றம் 6 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை பார்ப்பதால் குழந்தைகள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு அருகே புதுவீடு கட்டி வரும் தன் அக்காவின் வீட்டை பார்க்க கண்ணன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

சம்பவத்தன்று அதுபோல அங்கு வந்த கண்ணன் புல் போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் வீட்டுக்குள் புகுந்த அவர் சட்டென்று ஆடைகளை அவிழ்த்துவிட்டு, நிர்வாணமாக அவர்களின் அருகே சென்று பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். அதனால் குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். இதனால் சுதாரித்த கண்ணன் அங்கிருந்து தப்பியுள்ளார்.

பின்னர் குழந்தைகள் இதையறிந்த தமிழ் ஷகிலா தம்பதிகள் போலிஸில் புகார் அளிக்க, கண்ணன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.