திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:09 IST)

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது - சுப்ரீம் கோர்ட்

உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது திருத்தப்பட இந்து வாரிசு சட்டத்தின்படி மகளை போன்று மகளும் சொத்தின் சம பங்கு பெரும் உரிமை உள்ளது என்றும்,

இந்தச் சட்ட  நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துக்காரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம அளவில் பங்கு பெறக்கூடிய உரிமை உள்ளது என கோர்ட் தெரிவித்துள்ளது.