புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (18:04 IST)

பெரியார் சிலை அவதூறு வழக்கு – கைதானவர் குடும்பத்துக்கு பாஜக நிதியுதவி!

கோவையில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசியதாக கைது செய்யப்பட்ட அருண்கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்துக்கு பாஜக சார்பாக 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ஆம் தேதி காவிச்சாயம் ஊற்றப்பட்டது.  இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தேடி வந்த நிலையில், போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவர் இப்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக தொழில்நுட்ப பிரிவு கைதான அருண் கிருஷ்ணன் குடும்பத்திற்கு, ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி நேற்று அளித்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.