1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (09:34 IST)

சிதம்பரத்தை கம்பி எண்ண வைத்து நழுவிய இந்திராணிக்கு மன்னிப்பு!!

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறியதால் அவரை மன்னித்துவிடுவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜியும் இந்திராணி முகர்ஜியும் தங்களது சொந்த மகள் ஷீனா போராவை கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் தான் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி சம்மதம் தெரிவித்தார். இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திராணி சிபிஐயிடம் ஒரு வாக்குமூலத்தை அளித்தார். 
இந்த வாக்குமூலத்தில், டெல்லி ஹயாத் நட்சத்திர ஓட்டலில் தன்னையும் பீட்டர் முகர்ஜியையும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்ததாகவும், பத்துலட்சம் டாலர் லஞ்சம் கேட்டதாகவும் தொழிலில் வளர தமது மகனுக்கு உதவும்படி அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். 
 
இந்திராணி முகர்ஜியின் இந்த வாக்குமூலம்தான் தற்போது ப.சிதம்பரத்திற்கு எதிரான பலமான ஆதாரமாகவும் அவரை சிறையில் அடைத்ததர்கான முக்கிய காரணமாகவும் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்திராணிக்கு மன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது. 
 
ஆம், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இந்திராணி உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தப்படாது என்றும் அதோடு இந்திராணி அப்ரூவராக மாறி விட்டதால் அவர் மன்னிக்கப்பட்டு விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.