திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (08:34 IST)

மகனின் கள்ளக்காதல் லீலைகள் – மகளையும் மருமகனையும் பலி கொடுத்த குடும்பம் !

நாமக்கல் மாவட்டத்தில் அருண் என்பவர் தனது நண்பரின் மனைவியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அருணின் சகோதரி மற்றும் மைத்துனர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் பஸ் நிலையம் அருகே எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் நிக்கல்சன். இவரும் கோவையில் எலக்ட்ரிக்கல் ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் விற்பனை செய்துவரும் அருணும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி தொழில் ரீதியாக சந்தித்து வந்துள்ளனர். இதனால் அருண் நிக்கல்சனின் குடும்ப நண்பராகவும் ஆகியுள்ளார். ஒரு கட்டத்தில் நிக்கல்சனின் மனைவிக்கும் அருணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த நிக்கல்ஸன் அருணையும் தன் மனைவியையும் கண்டித்துள்ளார். ஆனால் சில நாட்களில் அவரின் மனைவி வீட்டை விட்டுக் காணாமல் போயுள்ளார். தன் மனைவியை அருண்தான் கடத்தியுள்ளார் என நினைத்த நிக்கல்சன் அவரின் அலைபேசிக்கு அழைத்து தனியாகப் பேச வேண்டுமென்று கூறியுள்ளார். ஆனால் அருண் வர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த நிக்கல்சன் அருணைக் கொலை செய்ய கூலிப்படையுடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அருண் இல்லாததால் அவரின் சகோதரி மற்றும் அவரது கணவர் மற்றும் அருணின் தந்தை ஆகியோரை வெட்டியுள்ளார். இதில் அருணின் சகோதரியும் மைத்துனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. உயிரிழந்த தம்பதிகளுக்கு 5 மாதத்தில் குழந்தை ஒன்று உள்ளது.