ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (10:55 IST)

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட ரஜினி பட நடிகை!

நடிகை மீனா தற்போது கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரஜினி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.


இந்நிலையில் நடிகை மீனா கொரோனா பரிசோதனை செய்து கொண்டததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் அந்த சோதனைக்கான முடிவுகள் வெளியாகவில்லை.