வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:34 IST)

மிடு விவகாரம்… லீணா மணிமேகலையின் பாஸ்போர்ட் முடக்கம் – சுசிகணேசன் வழக்கு தள்ளுபடி!

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயன்றதாக இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை குற்றம் சுமத்த அவர் மீது மான நஷ்ட வழக்கை தொடுத்தார் சுசிகணேசன்.

மி டூ விவகாரம் தமிழ் சினிமாவில் முக்கிய விவாதப் பொருளாக மாறக் காரணமானவர்களில் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையும் ஒருவர். 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுசி கணேசன் தன்னை அவருடையக் காரில் வைத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறினார். இந்த புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை கடந்த 9 ஆம் தேதி முடக்கியது. அதை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது சம்மந்தமாக பதிலளிக்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பாஸ்போர்ட் முடக்கத்தையும் விலக்கியது.

இந்நிலையில் இயக்குனர் சுசிகணேசன் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதனால் வழக்கு விசாரணை தாமதமாகும் எனக் கூறி அதனை தள்ளுபடி செய்தனர்.