1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:24 IST)

வோட்காவை பாட்டம்ஸ் அப் செய்த இளைஞர்… மூன்று மாதங்களாக கோமா!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பரின் சவாலை ஏற்று முழு வோட்கா பாட்டிலையும் காலி செய்து மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மின்னியஸோட்டா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் டேனியல் சாண்டுல்லி. கடந்த அக்டோபர் மாதம் இவர் மிசோரி பகுதியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கியுள்ளார். அங்கு நண்பர் நண்பர் ஒருவரின் சவாலை ஏற்று முழு வோட்கா பாட்டிலை ஒரே மூச்சில் குடித்துள்ளார்.

இதனால் அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 6 மடங்கு அதிகமாகி உள்ளது. மேலும் ஆல்கஹால் மூளைக்கும் பரவியுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவருக்கு மாரடைப்பும் ஏற்பட, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். பின்னர் வெண்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் மூளை இன்னமும் முழுதாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இது சம்மந்தமான வழக்கில் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் கூட அவர் இல்லை. இப்போதும் கோமாவிலேயே இருக்கிறார்.